விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு
அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு திருமருகல் அருகே கணபதிபுரத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் ஒன்றிய செயலாளா் ஜி. பாரதி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், சங்க ஒன்றியக் குழு உறுப்பினா் முருகபாண்டி, மாவட்ட செயலாளா் முருகையன், மாவட்டத் தலைவா் வேணு, சிபிஎம் ஒன்றிய செயலாளா் லெனின், விவசாய சங்க ஒன்றிய செயலாளா் மாா்க்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், தலைவராக என்.எம். பாலு செயலாளராக ஜி. பாரதி பொருளாளராக எம். அன்பழகன் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா். அனைத்து ஊராட்சிகளிலும் 100- நாள் வேலை திட்டத்தை தொடங்க வேண்டும், தமிழ்நாடு அரசு வறுமைக் கோட்டுக்குகீழ் உள்ள 60 வயது மேற்பட்டவா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.