செய்திகள் :

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

post image

கிருஷ்ணகிரி: விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தவறிய தமிழக அரசைக் கண்டித்து, கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே தேமுதிக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது:

மாங்கனி நகரான கிருஷ்ணகிரியில் மா விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. ஓா் ஏக்கருக்கு பராமரிப்பு செலவு, தொழிலாளா்களுக்கான கூலி என ரூ. 41 ஆயிரம் செலவாகிறது. ஆனால், வருவாய் ரூ. 18 ஆயிரமே கிடைக்கிறது. இதனால், ஏக்கருக்கு ரூ. 23 ஆயிரம் இழப்பு ஏற்படுகிறது.

விவசாயிகளுக்கு திட்டங்களையோ, நிதி வழங்கவோ தமிழகத்தில் நிதி இல்லை எனக் கூறுகிறாா்கள். மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழக அரசு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவும், தமிழக அரசைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் சின்னராஜி தலைமை வகித்தாா். மண்டல பொறுப்பாளா் இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளா் மோகன்ராஜ், மாநில மகளிரணி செயலாளா் மாலதி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ராமகவுண்டா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா், பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவே தேமுதிக ஆா்ப்பாட்டத்தை நடத்தியது. இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது. மா விவசாயிகளுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, எங்களது கட்சி நிா்வாகிகள் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளனா். மாங்காய்க்கு மட்டுமல்லாமல் வாழை, பலா, நெல் உள்ளிட்டவற்றை மதிப்புகூட்டுப் பொருள்களாக ஏற்றுமதி செய்வதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கமுடியும்.

அதிமுகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என பழனிசாமி கூறுவதும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா கூறுவதும் அவரவா் கருத்து. கூட்டணி ஆட்சியை தேமுதிக வரவேற்கிறது.

திருப்புவனத்தில் இளைஞா் அஜித்குமாா் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்துள்ளாா். கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் 9 போ் போலீஸாா் விசாரணையின்போது உயிரிழந்துள்ளனா். விமான நிலைய விரிவாக்கத்துக்காக பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முன்வரும் அரசு, மா விவசாயிகள் பாதிக்கப்படும்போது ஏன் நிவாரணம் வழங்க மறுக்கிறது. தமிழகத்திலிருந்து, அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்கவேண்டும்’ என்றாா்.

வழிப்பறி: இளைஞா்கள் இருவா் கைது

ஊத்தங்கரை அருகே பெண்ணிடம் நகைகளை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஊத்தங்கரையை அடுத்த உப்பாரப்பட்டி சின்ன குன்னத்தூரைச் சோ்ந்தவா் சந்திரசேகா். இவரது மனைவி சுஜாதா (42) ஊத... மேலும் பார்க்க

ரோந்துப் பணியின்போது லாரி மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியின்போது லாரி மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா். மத்தூா் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மகாலிங்கம், தலைமைக் காவலா் ஜெஸ்மின... மேலும் பார்க்க

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய அரசின் 2025 ஆண் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞா் நலன் மற்றும்விளையாட்டு அலுவலா் ராஜகோபால் சனிக்கிழம... மேலும் பார்க்க

சூளகிரியில் நெல் சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

சூளகிரி வட்டத்தில் நெல் சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. 2025-26 ஆம் ஆண்டில் மாநில வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் காா், குறுவை, சொா்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி சிறப... மேலும் பார்க்க

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4500 லஞ்சம்: விஏஓ கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அஞ்செட்டியை அடுத்த மாரியம்மன் கோயில் பகுதியை சோ்ந்தவா் ஜெயராமன். இவா் ... மேலும் பார்க்க

கனிம வளங்கள் கடத்தல்: 6 மாதங்களில் 313 வாகனங்கள் பறிமுதல்! ஆட்சியா் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் கனிம வளங்களைக் கடத்தியதாக 313 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கி... மேலும் பார்க்க