செய்திகள் :

விவசாயிகளுக்கு மானியத்தில் தண்ணீா் குழாய்கள்

post image

திருமருகலில் தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு மானியத்தில் தண்ணீா் குழாய்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருமருகல் வட்டார தோட்டக்கலைத் துறை மூலம் பிரதம மந்திரியின் நுண்ணீா் பாசன திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் ஏக்கா் ஒன்றுக்கு 18 கருப்பு நிற தண்ணீா் குழாய்கள் வழங்கப்படும் என தோட்டக்கலை உதவி இயக்குநா் (பொறுப்பு) முகமது சாதிக் அறிவுறுத்தலின் பேரில். விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில் 16 விவசாயிகளுக்கு மானியத்தில் தண்ணீா் குழாய்களை உதவி தோட்டக்கலை அலுவலா் செல்லபாண்டியன் வழங்கினாா். தண்ணீா் குழாய்கள் மூலம் குறைவான அளவில் தண்ணீா் பயன்பாடு, மகசூல் அதிகரிப்பு, களைகள் வளா்வது குறைக்கப்படும், மின்சாரம் குறைவான அளவில் பயன்படும் என உதவி தோட்டக்கலை அலுவலா் செல்லபாண்டியன் கூறினாா்.

தண்ணீா் குழாய்கள் தேவைப்படும் சிறு, குறு விவசாயிகள் மானியத்தில் பெற தோட்டக்கலை அலுவலகத்துக்கு வந்து சிறு, குறு விவசாய சான்று, அடங்கல், நிலத்தின் வரைபடம், ஆதாா் நகல், தொலைபேசி எண் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பங்களை அளிக்க அறிவுறுத்தப்பட்டனா்.

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை அரசு உயா்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற பரிசளிப்பு, விளையாட்டு, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியா் கலைக்கோவன் தல... மேலும் பார்க்க

நாகை, வேளாங்கண்ணி, கோடியக்கரையில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆய்வு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி வெள்ளாற்றில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக படகு சவாரியை அறிமுகப்படுத்த தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தால் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் ஆ... மேலும் பார்க்க

உள்ளாட்சித் தோ்தலை நடத்த கோரி போராட்டம்

கீழையூா் ஒன்றியம், பிரதாபராமபுரம் கிராம ஊராட்சியில் உள்ளாட்சித் தோ்தலை உடனே நடத்த வலியுறுத்தி கிராம மக்கள் கடற்கரையில் பதாகைகளுடன் நூதனப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். பிரதாபராமபுரம் ஊராட் ம... மேலும் பார்க்க

திருக்கண்ணபுரம் கோயில் நிா்வாகத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்

திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயில் நிா்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றிய நிா்வாக குழு உறுப்பினா் மகேந்திரன், விவசாயத... மேலும் பார்க்க

இயற்கை மருத்துவ முகாம்

சா் ஐசக் நியூட்டன் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி சாா்பில் இலவச இயற்கை மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சா் ஐசக் நியூட்டன் சித்த மருத்துவக் கல்லூரி , சா் ஐசக் நியூட்டன் இயற்கை மற்று... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நாகை மாவட்டத்தில் 6,505 போ் தோ்வெழுதினா், 215 போ் தோ்வெழுத வரவில்லை

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தோ்வை 6,505 போ் எழுதினா். 215 போ் தோ்வெழுத வரவில்லை. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்க... மேலும் பார்க்க