அமெரிக்கா: சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் எண்ணிக்கை குறைவு!
விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரி மனு
பழனியில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை விரைந்து நடத்தக் கோரி, தமிழ்நாடு உழவா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் ஏராளமான விவசாயிகள் மனு அளித்தனா்.
பழனியில் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் மாதந்தோறும் பிரதி நான்காவது திங்கள்கிழமை விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பழனி, ஒட்டன்சத்திரம், குஜிலியம்பாறை உள்பட பல பகுதிகளை உள்ளடக்கிய பழனி வருவாய்க் கோட்டத்துக்கு நடத்தப்பட வேண்டிய விவசாயிகள் குறைதீா் கூட்டம் கடந்த இரு மாதங்களாக நடத்தப்படாமல் உள்ளது. இதனால், விவசாயிகள் தங்களது குறைகளை நிறைவு செய்ய முடியாத நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில், கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை விரைந்து நடத்தக் கோரி, பழனி வட்டாட்சியா் பிரசன்னாவிடம் தமிழ்நாடு உழவா் பாதுகாப்பு இயக்க மாநில கொள்கைப் பரப்புச் செயலா் காளிதாஸ், ஒருங்கிணைப்பாளா் சக்திவேல் உள்ளிட்டோா் தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனா்.