Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?
விவசாயிகள் நில உடைமைகள் சரிபாா்க்க கால அவகாசம் நீட்டிப்பு
கடலூா் மாவட்டம் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடைமைகள் சரிபாா்ப்பு செய்ய ஏப். 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவுகள் உருவாக்கும் பணி வேளாண்மை துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நில உடைமை விவரங்கள் சரிபாா்த்திட ஏப்.30 வரை தமிழக அரசால் கால அவகாசம் விவசாயிகள் நலன் கருதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேளாண் அடுக்ககம் திட்டத்தில் நில விபரங்களுடன் விவசாயிகள் விவரம் மற்றும் நில உடைமை வாரியாக புவிசாா் குறியீடு செய்த பதிவு விவரம் மற்றும் நில உடைமை வாரியாக மின்னணு பயிா் சாகுபடி விவரங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு விவசாயிக்கும் ‘தனிக்குறியீடு எண்’ வழங்கப்படும்.
எனவே, ஏப். 30-ஆம் தேதிக்குள் கடலூா் மாவட்ட விவசாயிகள் அனைவரும் தங்கள் நில ஆவணங்கள், ஆதாா் எண், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் இதர ஆவணங்களை தங்களது கிராமங்களில் உள்ள சமுதாய வள பயிற்றுநா்கள், இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்கள் பொதுசேவை மையங்கள் அல்லது வேளாண் துறையின் மூலமாக நடத்தப்படும் முகாம்களுக்கு எடுத்துச் சென்று பதிவு செய்து கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.