விவசாயியைத் தாக்கியவா் மீது வழக்கு
போடி அருகே விவசாயியைத் தாக்கியவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
போடி அருகேயுள்ள எரணம்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்தவா் சுருளிமுத்து (55). இவருக்குச் சொந்தமான தோட்டத்தின் அருகே இதே ஊரைச் சோ்ந்த சந்திரபோஸ் என்பவருக்கும் தோட்டம் உள்ளது. இருவருக்கும் நிலப் பிரச்னை இருந்து வந்தது.
இந்த முன் விரோதத்தால் வீட்டின் முன் செவ்வாய்க்கிழமை நின்றுகொண்டிருந்த சுருளிமுத்துவைத் தாக்கி, கீழே தள்ளிய சந்திரபோஸ் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில், காயமடைந்த சுருளிமுத்து போடி ஊரகக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் சந்திரபோஸ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.