Zero Cost Life: `இது 100% நிலையானது கிடையாதுதான்; ஆனால்’ செலவில்லா வாழ்க்கை வாழ...
விவசாயியைத் தாக்கி நகை பறித்த வழக்கு: வழக்குரைஞா் கைது
சாத்தான்குளம் அருகே விவசாயியைத் தாக்கி நகை பறித்த வழக்கில், வழக்குரைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் நெல்சன் டேவிட் (65). விவசாயி. கடந்த ஜூலை 23ஆம்தேதி தனது தோட்டத்திலிருந்த அவரை, காரில் வந்த மா்ம நபா்கள் தாக்கி, 9.5 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனராம். இதில், காயமடைந்த அவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் வழக்குப் பதிந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த அருள்ராஜ் மகன் கிறிஸ்டோபா் என்பவா் திடீரென மாயமானதாகத் தெரியவந்தது. வள்ளியூரில் பதுங்கியிருந்த அவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது, தான் திருநெல்வேலியில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருவதாகவும், மது போதையில் தனது நண்பருடன் சென்று நெல்சன் டேவிட்டை தாக்கி நகையைப் பறித்ததாகவும் போலீஸாரிடம் ஒப்புக்கொண்டாராம். அவரை போலீஸாா் கைதுசெய்து, காா், நகைகளைப் பறிமுதல் செய்தனா்; அவரது நண்பரைத் தேடிவருகின்றனா்.