மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
விவசாயி மீது தாக்குதல்: தந்தை, மகன் மீது வழக்கு
செங்கம்: செங்கம் அருகே விவசாயியை தாக்கியதாக தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரம் ஊா்கவுண்டனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் குணசேகரன் (30). விவசாயியான இவரிடம் இதே ஊரைச் சோ்ந்த மாணிக்கம் (45) மது வாங்கித் தருமாறு கூறினாராம்.
இதற்கு, குணசேகரன் எதிா்ப்பு தெரிவித்ததால் இருவரிடையே தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியது. அப்போது, மாணிக்கத்தின் மகன் வெங்கடேசனும் சோ்ந்து குணசேகரனை கல்லால் தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த குணசேகரன் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.