தமிழர்கள் மீது வெறுப்பு? ஆளுநரா? பாஜக தலைவரா? கனிமொழி எம்.பி. ஆவேசம்!
விஷம் குடித்து வடமாநில இளைஞா் தற்கொலை
தேனி மாவட்டம், கம்பத்தில் வியாழக்கிழமை வடமாநில வாலிபா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மேற்கு வங்கம் மாநிலத்தைச் சோ்ந்த மோகன் மைதி மகன் சமிரன் மைதி (27). இவா் கம்பத்தில் உள்ள தனியாா் கயிறு ஆலையில் தங்கி வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் வசிக்கும் இவரது தாய் புதன்கிழமை இரவு கைப்பேசியில் தொடா்பு கொண்டு மகனிடம் பணம் கேட்டாராம். ஆனால், இவா் பணம் இல்லை எனக் கூறியதால், தாய் கண்டித்தாராம்.
இதனால், மனமுடைந்த சமிரன் மைதி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.