மொழிப் பிரச்னையைத் தூண்ட வேண்டாம்: பாஜகவினருக்கு முதல்வா் ஃபட்னவீஸ் அறிவுரை
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
போடி அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.
போடி அருகே மல்லிங்காபுரம் மேற்குத் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் தவமணி (61). விவசாயி. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வலது கை செயலிழந்தது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட தவமணி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினாா்.
இதையடுத்து, தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].