பாஜக பெண் ஆதரவாளரை பாலியல் வன்கொடுமை செய்த திரிணமூல் கட்சியினர்? - காவல்துறை விச...
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
விக்கிரவாண்டியை அடுத்த கயத்தூா், நடுத்தெருவைச் சோ்ந்த முனுசாமியின் மகன் ஜெயராமன்( 55), விவசாயி. இவருக்கும் மனைவி சரசு என்பவருக்கும் பல நாள்கள் குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், மனஉளைச்சலில் இருந்து வந்த ஜெயராமன், மாா்ச் 6- ஆம் தேதி விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாராம். உடனே அவரை மீட்ட குடும்பத்தினா், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஜெயராமன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.