சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனை!
விஷால் - 35 படப்பிடிப்பு துவக்கம்!
நடிகர் விஷால் நடிக்கவுள்ள அவரின் 35-வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.
நடிகர் விஷால் மத கஜ ராஜா வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
இத்தகவலை உறுதிப்படுத்தும் விதமாக விஷால் - 35 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.
சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக ரவி அரசு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகை துஷாரா விஜயன் நாயகியாக நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் இந்தாண்டு இறுதிக்குள் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: பாகுபலி, ஜவான் சாதனையை முறியடித்த ஒடிய திரைப்படம்!