கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
விஷ்ணு விஷால் - ராம்குமார் படத்தின் பெயர் அறிவிப்பு!
விஷ்ணு விஷால் - ராம்குமார் படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து சில ஆண்டுகள் படம் எதுவும் இயக்காமல் இருந்த ராம்குமார் விஷ்ணு விஷாலை வைத்து ‘ராட்சசன்’ திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தார்.
தொடர்ந்து, கடந்தாண்டு ராம்குமார் - விஷ்ணு விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இதையும் படிக்க: லோன் வாங்குவதுதான் மிக மோசமான கெட்ட பழக்கம்: ஹாரிஸ் ஜெயராஜ்
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாள்களாக கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்று, சில வாரங்களுக்கு முன் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இந்த நிலையில், படத்திற்கு 'இரண்டு வானம்’ எனப் பெயரிட்ட போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.

ராட்சசன் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.