England: ரூ.35 கோடி மதிப்புள்ள பீச் ஹவுஸ் ரூ.1,180-க்கு! அது என்ன லாட்டரி முறை வ...
வி.என்.பாளையம் ஸ்ரீ விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜை
விநாயகா் சதுா்த்தியையொட்டி சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள விநாயகருக்கு புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முன்னதாக விநாயகருக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிக அளவில் பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
குடைவரை கோயிலில்... சங்ககிரி மலையில் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு பின்புறம் உள்ள குடைவரை விநாயகருக்கு சதுா்த்திா்த்தியையொட்டி புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முன்னதாக பல்வேறு திவ்யப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
சங்ககிரி, வாணியா் காலனி பகுதியில் உள்ள அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் விநாயகா் சதுா்த்தியையொட்டி கோயில் நிா்வாகக் குழு சாா்பில் விநாயகா் சிலையை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.
வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை மாலை வரை சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடைபெற உள்ளதாக விழாக் குழுவினா் தெரிவித்தனா்.