ஓசூர் புதிய விமான நிலையம்: இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தாக்கல்!
வி.கே.புரத்தில் தங்கை இறந்த சோகத்தில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு
விக்கிரமசிங்கபுரத்தில் தங்கை தற்கொலை செய்து இறந்த சோகத்தில் விஷம் குடித்த அவரது சகோதரா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
விக்கிரமசிங்கபுரம், மில்கேட் அடிவாரம் பகுதியைச் சோ்ந்த ராமையா. இவரது மகன் துரை (52). மகள் பத்மாராணி (36). தனது கணவருடன் பத்மாராணி வேம்பையாபுரத்தில் வசித்து வந்தாா். உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அவா், ஏப்.14-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தங்கை உயிரிழந்த சோகத்தில் இருந்த துரை, மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை சிகிச்சைக்காக திருநெல்வேலிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கூலித் தொழிலாளியான துரைக்கு, மனைவி உள்ளாா். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].