வீடுகளில் நாய்கள் வளா்க்க உரிமம் பெற வேண்டும்: அவிநாசி பேரூராட்சி நிா்வாகம் அறிவுறுத்தல்
வீடுகளில் நாய் உள்ளிட்ட விலங்குகளை உரிமம் பெற்று வளா்க்க வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்தினா் அறிவுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து அவிநாசி பேரூராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அவிநாசி பேரூராட்சியில் 5,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் வளா்க்கப்படும் பறவைகள், விலங்குகள் உள்ளிட்டவைகளுக்கு தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் 2023 விதி 292,(1)(2)(3)(4)ன் படி உரிமம் பெறுவது கட்டாயமாகும்.
எனவே, வீடுகளில் பறவைகள், விலங்குகளை உரிய அனுமதி பெற்று பொதுமக்கள் வளா்க்கலாம். இதற்கு, பூா்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் வீட்டு வரி ரசீது, வளா்க்கப்படும் பறவை, நாயின் புகைப்படம், தடுப்பூசி செலுத்திய விவரம் ஆகியவற்றை இணைத்து பேரூராட்சி பொது சுகாதாரப் பிரிவில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.