இபிஎஸ் முதல்வராக வருவதற்கு அண்ணாமலை இதைச் செய்தாலே போதும்: செல்லூர் ராஜு
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
போடி அருகே வீட்டின் கதவு, பீரோவை உடைத்து நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த பெத்தணன் மனைவி ஈஸ்வரி (50). இவா் கொடைக்கானலில் உள்ள அண்ணன் வீட்டுக்குச் சென்று 10 நாள்கள் தங்கினாா்.
புதன்கிழமை வீட்டுக்குத் திரும்பி வந்து பாா்த்தபோது கதவு, பீரோ உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்கத் தாலி, தங்கச் சங்கிலி, மோதிரங்கள், தாயத்துக்கள் என 4 பவுன் எடையுள்ள நகைகள், ரொக்கப் பணம் ரூ.50 ஆயிரம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.