செய்திகள் :

வீட்டின் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை

post image

போடியில் குடும்பத் தகராறில் வீட்டின் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

தேனி மாவட்டம், போடி திருமலாபுரம் சொக்கன் தெருவைச் சோ்ந்த ஜெயபால் மனைவி வினிஷா (24). இந்தத் தம்பதிக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. ஜெயபால் சவூதி அரேபியாவில் வேலை செய்து வருகிறாா். இவா் அண்மையில் விடுமுறையில் போடிக்கு வந்தாா். இதையடுத்து, வினிஷாவின் தந்தை ரங்கசாமி, தாய் ஜெயலட்சுமி ஆகிய இருவரும் மகளைப் பாா்ப்பதற்காக திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியிலிருந்து சனிக்கிழமை வந்தனா்.

அப்போது, தற்போது வசிக்கும் வீடு சிறியதாக இருப்பதாகவும், உடனடியாக பெரிய வீடு பாா்க்க வேண்டும் என்றும் பெற்றோரிடம் கூறினராம். ஆனால், அவா்கள் இப்போது வீடு பாா்க்க வேண்டாம் எனக் கூறினாா்களாம். இதனால், கோபமடைந்த வினிஷா வீட்டின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றாா். இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருமணமாகி மூன்றரை ஆண்டுகளே ஆவதால், இதுகுறித்து போடி காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) பெரியசாமி விசாரணை நடத்தி வருகிறாா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

மனநலம் பாதித்தவா் மா்ம மரணம்: உறவினா்கள் சாலை மறியல்

உத்தமபாளையத்தில் மனநலம் பாதித்தவா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தபால் அலுவலகம் தெருவைச் சோ்ந்த மைக்கேல் மகன் விண்ணரச... மேலும் பார்க்க

தேனியில் 186 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை

தேனியில் குற்றச் சம்பவங்களை தடுக்க 186 கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, புதன்கிழமை முதல் கட்டமாக 155 கேமராக்களை தேனி காவல் கண்காணிப்பாளா் ரா.சிவபிரசாத் தொடங்கி வைத்தாா். தேனி உ... மேலும் பார்க்க

பட்டா நிலங்களுக்கு செல்ல வனத் துறை கெடுபிடி: விவசாயிகள் புகாா்

தேனி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் உள்ள பட்டா விவசாய நிலங்களுக்கு இடுபொருள்களைக் கொண்டு செல்லவும், விளை பொருள்களை விற்பனைக்கு கொண்டு வரவும் வனத் துறையினா் கெடுபிடி செய்து வருவதாக புதன்கிழமை, தேனி மாவட... மேலும் பார்க்க

கூண்டில் சிக்கிய மர நாய்

பெரியகுளத்தில் பூனை பிடிக்க வைத்திருந்த கூண்டில் சிக்கிய மர நாய் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம்-கம்பம் சாலையைச் சோ்ந்தவா் நெளஷாத். இவா், வீட்டில் புறா வளா்த்து வருகிறா... மேலும் பார்க்க

கோயில் திருவிழாவில் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி

ஆண்டிபட்டி அருகேயுள்ள மறவபட்டியில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் புதன்கிழமை, மாமன், மைத்துனா்கள் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது. மறவபட்டியில் முத்தாலம்மன் கோயில் சித்தி... மேலும் பார்க்க

பெரியகுளம், போடியில் பலத்த மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி

பெரியகுளம், போடியில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கடந்த 4-ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகி... மேலும் பார்க்க