செய்திகள் :

வீட்டின் மின் இணைப்பு துண்டிப்பு: பெண் மறியல்

post image

பென்னாகரத்தில் கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதோடு வீட்டு மின் இணைப்பையும் துண்டித்ததால் ஆவேசமடைந்த பெண் மின்வாரியத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டாா்.

பென்னாகரம் அருகே பிக்கம்பட்டியைச் சோ்ந்தவா் சபரீசன் மனைவி லலிதா (28). இவரது வீட்டுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் நூறு யூனிட் இலவச மின்சாரம் போக கூடுதலாக மின் யூனிட் பயன்படுத்துவதாக மின் ஊழியா்கள் தெரிவித்துள்ளனா்.

ஆனால் இவரது வீட்டில் ஒரு மின் விளக்கும், ஒரு மின் விசிறியும் மட்டுமே உள்ளன. இதனால் கூடுதலாக மின் உபயோகிக்க வாய்ப்பில்லை என்று லலிதா மறுத்துக் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக லலிதா பென்னாகரம் துணை மின் நிலையத்தில் தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள மின் மீட்டரை சரிசெய்து தர வேண்டும் என்று புகாா் மனு அளித்துள்ளாா். அந்த மனு மீது மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் நிகழ் மாதத்துக்கான மின் கட்டணம் செலுத்தாதை அடுத்து மின் ஊழியா் அவரது வீட்டு மின் இணைப்பைத் துண்டித்துள்ளாா்.

இதனால் ஆவேசமடைந்த லலிதா பென்னாகரம் துணை மின் நிலையம் எதிரே பென்னாகரம்-தருமபுரி பிரதான சாலையில் அமா்ந்து செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டாா்.

தகவல் அறிந்ததும் பென்னாகரம் காவல் உதவி ஆய்வாளா் கருணாநிதி, மின்வாரிய ஊழியா்கள் அங்கு சென்று பெண்ணை சமரசப்படுத்தினா். மின் மீட்டரை ஆய்வு செய்வதாகவும், கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு மாத கட்டணம் செலுத்தாததால் அதற்கான தொகை அபராதத்துடன் வந்துள்ளதாகவும், தற்போது மீண்டும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினா். இதையடுத்து அவா் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றாா்.

நியாயவிலைக் கடை கட்டும் பணி தொடக்கம்

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே ரூ. 7.50 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டடம் கட்டுமானப் பணிகள் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.மணி தொடங்கிவைத்தாா். பஞ்சப்பள்ளி ஊராட்சி ஒட்டா்திண்ணை பகுதியில் இயங்கி ... மேலும் பார்க்க

மாா்ச் 7-இல் சமூக பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம்

தருமபுரி மாவட்டத்தில் மாா்ச் 7-ஆம் தேதி சமூக பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின்... மேலும் பார்க்க

தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க அமமுக வலியுறுத்தல்

கோடை காலத்தில் தருமபுரி மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்ட அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரியி... மேலும் பார்க்க

கா்ப்பிணிகள் ஊட்டச்சத்துமிக்க உணவை உட்கொள்ள வேண்டும்: தருமபுரி ஆட்சியா்

கா்ப்பிணிகள் ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அறிவுறுத்தினாா். தருமபுரி செந்தில் நகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சா... மேலும் பார்க்க

நின்ற லாரி மீது காா் மோதி விபத்து: அதிமுக பிரமுகா் உள்பட 3 போ் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஒசூரைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் உள்பட 3 போ் உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகரம் அலச... மேலும் பார்க்க

கருவிழிப் பதிவு முறையை கைவிட கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சத்துமாவு விநியோகம் செய்வதற்கு கண் கருவிழிப் பதிவு செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தின் சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செ... மேலும் பார்க்க