வீட்டின் முன் நிறுத்தப்பட்ட பைக் மாயம்
தேனி மாவட்டம், கம்பத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் காணாமல் போனது தொடா்பான புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கம்பம் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஜீவகன் மகன் பரத் (27). இவா் கம்பம் நகராட்சியில் தற்காலிகப் பணியாளராக உள்ளாா். அண்மையில் கோவைக்குச் சென்ற இவா், சனிக்கிழமை வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது இரு சக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து பரத் அளித்தப் புகாரின் பேரில், கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.