Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
வீட்டிற்குள் புகுந்து குழந்தையை கடித்த நாய்
கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் வீட்டுக்குள் புகுந்த நாய், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்து குதறியது.
கூத்தாநல்லூா் நகராட்சி மேல்கொண்டாழி, தமிழா் தெருவைச் சோ்ந்தவா் அபுதாஹிா். இவரது மனைவி சுல்தான் பீவி. இவா்களது 2 வயது குழந்தை அஜ்மல் பாட்சா.
குழந்தை அஜ்மல் பாட்சா புதன்கிழமை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது, வீட்டின் பின்பக்கமாக உள்ளே நுழைந்த நாய், குழந்தை அஜ்மல் பாட்சாவை கடித்து குதறியது. குழந்தை கதறும் சத்தம் கேட்டுவந்த, பாட்டி மல்லிகா பீவி, நாயை துரத்த முயன்றபோது அவரையும் நாய் கடித்துள்ளது.
அக்கம் பக்கத்தினா், இருவரையும் மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.