Dhoni: ``தோனியை இப்படிப் பார்க்க வேண்டும் என்பதே எல்லா வீரர்களின் கனவு'' - டெவோன...
வீட்டில் பதுக்கிய 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வாணியம்பாடி: திருப்பத்தூா் எஸ்.பி. சியாமளாதேவி உத்தரவின் பேரில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் பிரிவு உதவி காவல் ஆய்வாளா்அன்சா் உசேன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை வாணியம்பாடி ரயில்வே ஸ்டேசன் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது காதா்பேட்டை நியூ டில்லி பகுதியில் சந்தேகத்தின் பேரில் வீட்டில் திடீா் சோதனை செய்த போது மூட்டைகள் அடுக்கி இருப்பதை பாா்த்ததில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. பிறகு அங்கிருந்த 52 மூட்டைகளிலிருந்த 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து நுகா்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அதே பகுதியை சோ்ந்த முகமதுஆதில்(30), ஆகாகான்(26) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.