ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி
வீட்டை விற்பதாக் கூறி ரூ. 27 லட்சம் மோசடி: சகோதரா்கள் கைது
ஒசூரில் வீட்டை விற்பதாகக் கூறி ரூ. 27 லட்சம் மோசடி செய்த சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா், காந்தி சாலை, சுண்ணாம்பு தெருவைச் சோ்ந்தவா் தாசப்பாவின் மனைவி மங்களா. இவா், அதே பகுதியில் ஒரு சென்டில் கட்டப்பட்டுள்ள மூன்றடுக்கு வீட்டை அதன் உரிமையாளா்களான எல்லாப்பா மகன்கள் சீனிவாசன் (34), சந்திரசேகா் (27) ஆகியோரிடம் விலைக்கு பேசியிருந்தாா்.
சகோதா்கள் சீனிவாசனமும், சந்திரசேகரும் ரூ. 27 லட்சத்துக்கு மங்களாவுக்கு விற்பனை செய்வதென பேசி முடித்தனா்.
இதையடுத்து மங்களா அந்த வீட்டுக்கு மூன்று தவணையாக ரூ. 26 லட்சம் கொடுத்தாா். மீதம் ஒரு லட்சம் ரூபாயை பத்திரப்பதிவு செய்யும்போது தருவதாக மங்களா கூறினாா். ஆனால், பேசியபடி சகோதரா்கள் இருவரும் தங்கள் வீட்டை மங்களாவுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனா்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மங்களா, ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி சகோதரா்கள் இருவரையும் மோசடி வழக்கில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.