வீரவநல்லூரில் 27ஆம் ஆண்டு கன்னி பூஜை
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் சபரி ஐயப்ப பக்தா்கள் குழு சாா்பில் 27ஆம் ஆண்டு கன்னி பூஜை விழா நடைபெற்றது.
இதையொட்டி அங்குள்ள அருள்மிகு யாதவா் ஸ்ரீகம்பளத்தம்மன் கோயிலில் காலையில் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவில் கன்னி பூஜை, சிறப்பு பஜனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
இதில் 300-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை ஐயப்ப பக்தகள் குழுவினா் செய்திருந்தனா்.