செய்திகள் :

வெங்காயம் கலந்த உணவு பரிமாறியதால் ஹோட்டலை அடித்து நொறுக்கிய பக்தர்கள்!

post image

புனித யாத்திரை சென்ற பக்தர்களுக்கு வெங்காயம் கலந்த உணவு பரிமாறிய ஹோட்டல் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திங்கள்கிழமை(ஜூலை 7) இரவு, பர்காஸி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தில்லி - ஹரித்வார் தேசிய நெடுஞ்சாலையில் ஃபலௌடா புறவழிச்சாலை அருகே செயல்பட்டு வந்த ஒரு தாபாவில்(சாலையோர உணவுக் கடை) உணவருந்திய கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற கான்வர் யாத்திரை பக்தர்கள் 20 பேர் அடங்கிய ஒரு குழுவுக்கு வழங்கப்பட்ட உணவில் வெங்காயமும் கலந்திருந்ததால் அவர்கள் அனைவரும் ஆத்திரமடைந்தனர்.

பக்தர்களுக்கு வெங்காயம் கலந்த உணவு கொடுக்கப்பட்டதால் அவர்கள் கோபத்தில் கடை உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்ததாகவும், அதன்பின் கடையிலிருந்த நாற்காலிகள் மேஜைகளை தாக்கி சேதப்படுத்தியதாகவும் தெரிகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் அதிகாரிகள் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து யார் மீதும் எந்த தரப்பும் புகார் தெரிவிக்காததால் வழக்கு பதியப்படவில்லை என்ரும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 109 ஆக உயா்வு

ஹன்ட்: டெக்ஸஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது. இதில், குவாடலூப் நதிக்கரையில் அமைந்திருந்த கேம்ப் மிஸ்டிக் என்ற கோடைகால முகாமில் 28 சிறுமிகளு... மேலும் பார்க்க

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயிலில் புகைமூட்டம்: பயணிகள் அதிர்ச்சி

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயிலில் புகைமூட்டம் ஏற்பட்டதால், வடமதுரை அருகே ரயில் நிறுத்தப்பட்டு 30 நிமிடங்களுக்கு பின்னர் புறப்பட்டு சென்றது.நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயிலில் புகை மற்றும் தீப்பிடித்த வா... மேலும் பார்க்க

தங்கம் விலை: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.480, கிராமுக்கு ரூ.60 குறைந்து விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.72,0... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 35,250 கன அடியாக நீடிப்பு

மேட்டூா்: காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 35,250 கன அடியாக நீடிக்கிறது.காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்த காரணத்... மேலும் பார்க்க

நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் கல்லுக்குள் ஈரம் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இயக்குநர் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை அர... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்து: மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி. கணேசன் அஞ்சலி!

கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி. கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன், ரயி... மேலும் பார்க்க