நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயிலில் புகைமூட்டம்: பயணிகள் அதிர்ச்சி
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயிலில் புகைமூட்டம் ஏற்பட்டதால், வடமதுரை அருகே ரயில் நிறுத்தப்பட்டு 30 நிமிடங்களுக்கு பின்னர் புறப்பட்டு சென்றது.
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயிலில் புகை மற்றும் தீப்பிடித்த வாசனையை பயணிகள் உணர்ந்துள்ளனர்.
இதையடுத்து ரயில் வடமதுரை அருகே நிறுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 30 நிமிட தாமதங்களுக்கு பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது.
நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் ஏற்பட்ட புகைமூட்டத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வந்தே பாரத் ரயிலில் புகைமூட்டம் காணப்பட்டதால் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது.
இதற்கு முன்னர், சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலின் சி1 பெட்டியில் புகை மற்றும் தீப்பற்றிய வாசனையை பயணிகள் உணர்ந்தனர். இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு பரிசோதனைக்கு பின்னர் புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?