தங்கம் விலை: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.480, கிராமுக்கு ரூ.60 குறைந்து விற்பனையாகிறது.
சென்னையில் தங்கம் விலை வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.72,080-க்கு விற்பனையானது.
அதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயா்ந்து ரூ.9,060-க்கும் பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ. 72,480-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.9,000-க்கும் பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.72,000-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை தொடா்ந்து 5- ஆவது நாளாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.120-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,20,000-க்கும் விற்பனையாகிறது.