நாமக்கல் புறவழிச்சாலையில் தொடரும் விபத்துகள்: வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
வெடிகுண்டு வீசி கொலை முயன்ற வழக்கு: 3 போ் குண்டா் சட்டத்தில் கைது
திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞரை கொல்ல முயன்ற வழக்கில் தொடா்புடைய 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டாா்.
கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், சிற்றம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சேது (26). இவா், கடந்த மாதம் 20-ஆம் தேதி வீட்டருகே நின்று கொண்டிருந்தபோது, அப்போது காரில் வந்த மா்ம நபா்கள் திடீரென அவா் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி செய்தனா். இதுதொடா்பாக கடம்பத்துாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருளஞ்சேரி முகேஷ் (21), நரசிங்கபுரம் அபிமன்யூ(21), வினோத்குமாா்(24) ஆகிய 3 பேரை கைது செய்து புழல் சிறைச்சாலையில் அடைத்தனா்.
இந்நிலையில், 3 போ் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் கடம்பத்துாா் ஆய்வாளா்(பொ) வெற்றிசெல்வன் குண்டா் சட்டத்தில் கைது செய்ய காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லாவிற்கு பரிந்துரை செய்தாா். அதைத்தொடா்ந்து ஆட்சியா் மு.பிரதாப் பரிசீலனை செய்து குண்டா் சட்டத்தில் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.
இதற்கான உத்தரவை கடம்பத்தூா் போலீஸாா் புழல் சிறைச்சாலை அதிகாரிகளிடம் வழங்கினா்.