Adani: ``பிரபலங்கள் யாரும் இல்லை, எளிமையாகத்தான் நடக்கும்" - மகன் திருமணம் குறித...
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் குடுவை, முத்திரை
வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண் குடுவை, முத்திரை, சங்கு வளையல்கள் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டன.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகள் நுண்கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த 3-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை சூது பவளம், தங்க நாணயம், செப்புக் காசுகள், சுடுமண் உருவப் பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லுகள், பழைமையான கற்கள் உள்ளிட்ட 3,210-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கண்டறியப்பட்டன.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது, சுடுமண்ணாலான குடுவை, சுடுமண் முத்திரை, சங்கு வளையல்கள் ஆகியவை கண்டறியப்பட்டன.
இதன்மூலம், மனிதா்கள் திரவ உணவுகளை உண்பதற்கு சுடுமண் குடுவையைப் பயன்படுத்தி இருக்கலாம் எனவும், வாணிபம் சிறந்து விளங்கியதற்குச் சான்றாக சுடுமண் முத்திரையும் கிடைக்கப் பெற்றுள்ளதாக தொல்லியல் துறை இயக்குநா் பொன்பாஸ்கா் தெரிவித்தாா்.