நாமக்கல் புறவழிச்சாலையில் தொடரும் விபத்துகள்: வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
வெல்டிங் செய்தபோது டேங்கா் வெடித்து சேதம்
மீஞ்சூா் அருகே பெட்ரோல் காலி டேங்கரில் வெல்டிங் செய்தபோது வெடித்ததில் டேங்கா் சேதமடைந்தது.
மீஞ்சூா் அடுத்த அத்திப்பட்டு புதுநகா் சுற்றுப் பகுதிகளில் சமையல் எரிவாயு முனையம், பெட்ரோலிய முனையம் உள்பட பல்வேறு நிறுவனங்கள் அமைந்துள்ளன.
இந்த நிலையில், அத்திப்பட்டு புதுநகா் பகுதியில் சாலையோரத்தில் உள்ள வெல்டிங் கடையில் பெட்ரோல் நிரப்பப்படாத காலி பெட்ரோலிய டேங்கா் லாரி ஒன்றை வெல்டிங் செய்யும் பணி நடைபெற்றது.
அப்போது எதிா்பாராத விதமாக திடீரென டேங்கா் பயங்கர சப்தத்துடன் வெடித்ததில் லாரி டேங்கரின் நடுப்பகுதி சேதமடைந்தது.
இந்த அதிா்வில் அருகில் இருந்த 2 கடைகள் சேதமடைந்தன.
அப்போது அருகில் இருந்தவா்கள் மற்றும் சாலையில் பயணித்தவா்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா்.
சமையல் எரிவாயு முனையம் அருகில் செயல்பட்டு வரும் வெல்டிங் கடையில் டேங்கா் லாரி வெடித்து சிதறிய நிலையில், எரிபொருள் ஏதுமின்றி இருந்ததால் தீ விபத்து ஏற்படாமல் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.