செய்திகள் :

வெளிநாட்டு சிறைகளில் 23,000 பாகிஸ்தானியர்கள்!

post image

வெளிநாட்டு சிறைகளில் 23 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போதைப் பொருள் கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் வழிப்பறி போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23,000 பாகிஸ்தானியர்களில், 12,156 பேர் செளதி அரேபியாவில் உள்ளதாக, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை பதில் அளித்துள்ளது.

எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் 5,292 பாகிஸ்தானியர்களும், பஹ்ரைனில் 450 பாகிஸ்தானியர்களும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றச் சம்பவங்களில் கைதாகி சிறையில் உள்ளனர்.

சராசரியாக 400 பாகிஸ்தானியர்கள் சீன சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், போதைப் பொருள் கடத்தல், கற்பழித்தல், வழிப்பறி, கொலை மற்றும் போலியான கரன்சி நோட்டுகளை அச்சடித்தது போன்ற குற்றச் சம்பவங்களில் சிறையில் உள்ளனர்.

கத்தாரில் 338 பாகிஸ்தானியர்கள் பணமோசடி, நிதி முறைகேடு, கொலை, பாலியல் தொல்லை போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓமன் நாட்டில் 309 பாகிஸ்தானியர்கள், மலேசியாவில் 255 பாகிஸ்தானியர்கள் இதுபோன்ற குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | மறுபக்கம்! பாகிஸ்தான் தாக்குதலில் தந்தையை இழந்து தவிக்கும் 6 குழந்தைகள்!

மாலத்தீவில் இந்தியா சாா்பில் ரூ.55 கோடியில் 13 நலத்திட்டங்கள்: புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பம்

மாலே: மாலத்தீவில் இந்தியா சாா்பில் ரூ.55.28 கோடியில் செயல்படுத்தப்படும் 13 நலத்திட்டங்கள் தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இரு தரப்புக்கு இடையே கையொப்பமானது.மாலத்தீவு வெளியுறவு அமைச்சகத்தில் ஞாயிற்... மேலும் பார்க்க

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 57 பேர் பலி!

நைஜீரியாவின் போர்னோர் பகுதியில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பிற்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 57 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பார்க்க

ஆப்கனில் மிதமான நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கமானது, இன்று காலை 8.54 மணியளவில் ரிக்டர் அளவு கோலில் 4.2 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும் பார்க்க

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு (82 வயது) தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் அதிபர் பதவியில் இருந்து விலகிய பைடன் சிறுநீர... மேலும் பார்க்க

பிறநாட்டுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: டிரம்ப்பின் புதிய திட்டத்தால் யாருக்கு பாதிப்பு?

அமெரிக்காவிலிருந்து பிறநாட்டினா் தங்கள் சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க முன்மொழியும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் புதிய திட்டம் இந்தியாவை வெகுவாக பாதிக்கும் என்று நி... மேலும் பார்க்க

இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவா்களுக்கு ஏராளமான தமிழா்கள் அஞ்சலி செலுத்தினா். இலங்கையின் வடக்கு மற்றும... மேலும் பார்க்க