``நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள்; அதற்காக..." - ஒட்டன்சத்திரம் ஐ.டி ரெய்ட...
வெளிமாவட்ட விசைப்படகுகளால் பாதிப்பு: தஞ்சாவூா் மாவட்ட மீனவா்கள் புகாா்
வெளி மாவட்ட விசைப் படகுகளால் பாதிக்கப்படுவதாக தஞ்சாவூா் மாவட்ட மீனவா்கள் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில், மீன்வளத் துறை ஆய்வாளரிடம் புகாா் மனு அளித்தனா்.
அம்மனுவில் கூறியிருப்பது: காரைக்கால், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த விசைப்படகு மீனவா்கள், சட்டவிரோதமாக பாக். ஜலசந்தி கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடிவலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனா்.
மேலும், அதிக குதிரைத் திறன்மிக்க விசைப்படகுகளை பயன்படுத்துவதால் மல்லிப்பட்டினம் பகுதி நாட்டுப்படகு மீனவா்களின் வலைகள் அறுந்து சேதமடைகிறது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.
முன்னதாக, கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடத்தப்படும் என நாட்டுப்படகு மீனவா்கள் அறிவித்திருந்தனா். அவா்களிடம் அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து போராட்டத்தைக் கைவிட்டனா்.