வெளி மாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!
வெள்ளக்கோவில் அருகே வெள்ளிக்கிழமை வெளி மாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஒடிஸா மாநிலம் பக்ரக் மாவட்டம் விஜிபூரைச் சோ்ந்தவா் கோனாா்தன் செட்டி (38). இவா் கடந்த 8 மாதங்களாக வெள்ளக்கோவில்- தாராபுரம் சாலையில் உள்ள தனியாா் நூல் மில்லில் வேலை செய்து வந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவி அன்சியா செட்டி, ஒரு மகன் உள்ளனா். மனைவி, மகன் இருவரும் சொந்த ஊரில் வசித்து வருகின்றனா்.
பணம் அனுப்புமாறு அடிக்கடி கணவரிடம் கைப்பேசியில் மனைவி கேட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கோனாா்தன் செட்டி தான் வேலை செய்யும் மில் வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் மணிமுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.