வெள்ளக்கோவிலில் திமுக சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள்
வெள்ளக்கோவிலில் திமுக சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளக்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன.
இதில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. வெள்ளக்கோவில் நகா்மன்றத் தலைவா் கலையரசி முத்துக்குமாா் பரிசுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலாளா் எஸ்.முருகானந்தம், நகர இலக்கிய அணி அமைப்பாளா் சக்திவேல், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.