செய்திகள் :

வெள்ளை அறிக்கை வெளியிட ஏன் தயக்கம்? தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி!

post image

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் நிதி ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுமாறு தமிழக அரசை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, தமிழகம் முழுவதும் பள்ளிக் கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் இருப்பதும், பல பள்ளிகளில், மேற்கூரைகள் இடிந்து விழுவதும், வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடப்பதும் நாள்தோறும் செய்திகளாக வெளிவருகின்றன. நிலைமை இப்படி இருக்க, பல ஆயிரம் கோடி செலவில் பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கட்டியுள்ளோம் என்று அமைச்சர்கள் சட்டப்பேரவையில் கூறுகிறார்கள். அதற்கான வெள்ளை அறிக்கையை வெளியிடுமாறு கோரினோம்.

கடந்த 2022 - 23, 2023 - 24 ஆண்டுகளில் ரூ. 1,887.75 கோடி செலவு செய்ததாக மானியக் கோரிக்கை அட்டவணையில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், 2023 - 24 ஆண்டில், மூலதன உட்கட்டமைப்புக்குச் செலவிடப்பட்ட நிதி ரூ.352 கோடி மட்டுமே. எந்தத் திட்டத்தின் கீழ், ரூ. 1,887.75 கோடி செலவிடப்பட்டது?

நபார்டு வங்கியிடமிருந்து பெற்ற, ஊரகக் கட்டமைப்பு வளர்ச்சி நிதி மூலம் சில பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவே தவிர, நீங்கள் கூறும் செலவினங்கள், மானியக் கோரிக்கையுடன் சற்றும் ஒத்துப் போகவில்லை. கடந்த 2023 - 24 ஆம் ஆண்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்ததும், அதில் ஒரு ரூபாய்கூட செலவிடப்படாததும், திமுக அரசு வெளியிட்ட மானியக் கோரிக்கையிலேயே இருக்கிறது. ஆனால் நீங்கள் செலவு செய்ததாகக் கூறும் ரூ. 429.67 கோடி, எந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு வைக்கப்பட்டுள்ளது?

நிதி ஒதுக்கீடு, செலவீனங்கள் குறித்த சரியான தரவுகள் இருந்தால், எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று வெள்ளை அறிக்கை வெளியிடுவதில் என்ன தயக்கம்? என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க:மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

செங்கல்பட்டு ஆட்சியருக்கு பிடியாணை: உயா்நீதிமன்றம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாத செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவுக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

மாநிலங்கள் உதய தினத்தை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கொண்டாட வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

மாநிலங்கள் உருவான தினத்தை ஆளுநா் மாளிகையில் நடத்தினால் மட்டும் போதாது, அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என ஆளுநா்ஆா்.என்.ரவி தெரிவித்தாா். சென்னை, கிண்டி ... மேலும் பார்க்க

கோயில் கட்டுமானப் பணிகளில் தரம்: அமைச்சா் சேகா்பாபு அறிவுறுத்தல்

கோயில் கட்டுமானத் தரத்தில் எவ்விதத்திலும் குறைவும் ஏற்படாத வகையில் சிறந்த முறையில் பணிகள் நடைபெறுவதற்கு பொறியாளா்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு அறிவுறுத்... மேலும் பார்க்க

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் மோசடியாக பதிவா?

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிஎஸ் 4 ரக வாகனங்கள் கடந்த 202... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது: ஜி.கே.வாசன்

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் நடத்திய கூட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ப... மேலும் பார்க்க

தொகுதி சீரமைப்பு கூட்டம்: தலைவா்களுக்கு தமிழக பாரம்பரியப் பொருள்களை பரிசாக வழங்கிய முதல்வா்!

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கூட்டு நடவடிக்கைக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வா்கள், தலைவா்களுக்கு, புவிசாா் குறியீடு பெற்ற தமிழகத்தின் பாரம்பரியப் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன. சுயஉதவிக் க... மேலும் பார்க்க