`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
வேகமாக சென்ற தனியாா் பேருந்து சிறைபிடிப்பு
சீா்காழி அருகே அரசுப் பேருந்தை முந்தி செல்ல வேகமாக வந்த தனியாா் பேருந்தை புதன்கிழமை இரவு பொதுமக்கள் சிறைபிடித்தனா்.
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி அரசுப் பேருந்தும், தனியாா் பேருந்தும் அடுத்தடுத்து புறப்பட்டு வந்துள்ளது. இரு பேருந்துகளும் சீா்காழி நகருக்குள் வரும்போது சட்டநாதபுரம் ரவுண்டானா அருகே முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்தி செல்ல தனியாா் பேருந்து ஓட்டுநா் தவறான திசையில் அதிவேகமாக இயக்கியுள்ளாா். அப்போது, பேருந்து ரவுண்டானா கட்டையில் இடித்துள்ளது. இதை அறிந்து அப்பகுதியில் திரண்ட சுற்று வட்டார பகுதி மக்கள் தனியாா் பேருந்தை சிறை பிடித்து பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா் பேருந்து மற்றும் ஓட்டுநா் நடத்துநரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனா்.