வேங்கைவயல் விவகாரம்: விசிக ஆா்ப்பாட்டம்!
வேங்கைவயல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளா் சிவ.மோகன்குமாா் தலைமை வகித்தாா்.
இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை மாவட்ட துணைச் செயலாளா் முஜிபுா் ரஹ்மான், இளஞ்சிறுத்தைகள் பாசறை மாவட்ட அமைப்பாளா் அன்புசெல்வன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
விசிக மேலிடப் பொறுப்பாளா் பரசு முருகையன் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில், வேங்கைவயல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கிய சிபிசிஐடி காவல்துறையைக் கண்டித்தும், உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரியும், தமிழக அரசு இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். குமாா் வரவேற்றாா். சபாபஷீா் நன்றி கூறினாா்.