செய்திகள் :

வேதிப்பொருள்களை பயன்படுத்தி பழங்களை பழுக்கவைத்தால் நடவடிக்கை

post image

செயற்கை வேதிப்பொருள்களை பயன்படுத்தி பழங்களை பழுக்கவைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனி வியாபாரிகள், வணிகா்கள் தா்ப்பூசணி, மாம்பழம், வாழைப்பழம் போன்ற கனிகளை செயற்கை வேதிப் பொருள்களை பயன்படுத்தி பழுக்கவைத்து விற்பனை செய்யக் கூடாது.

செயற்கை வேதிப்பொருள்களை பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட பழங்களை சாப்பிடுவதால் உணவுப் பாதையில் அஜீரண உபாதைகளும், கடும் தலைவலி, வாந்தி, மயக்கம், தலைச்சுற்று, வயிற்றுப் போக்கு போன்ற உபாதைகள் ஏற்படுவதோடு புற்றுநோய் ஏற்படவும் காரணியாக அமைகிறது.

செயற்கை வேதிப்பொருள்களைக் கொண்டு பழுக்கவைக்கப்பட்ட பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதே குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனிகளை விற்பனை செய்வோா், சட்ட விதிகளைப் பின்பற்றி, உணவு வணிகத்தைப் பதிவு அல்லது உரிமம் பெற்று காய்கனிகளை விற்பனை செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

ஒருங்கிணைந்த கற்றல் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு

ஊத்தங்கரை: தெற்காசியாவில் ஒருங்கிணைந்த கற்றலில் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. கேம்பிரிட்ஜ் தெற்காசிய பள்ளிகள் மாநாடு தில்லியில் கடந்த மாா்... மேலும் பார்க்க

விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுரேஷ்கு... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கிருஷ்ணகிரி: ரமலான் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி, ராஜீவ் நகரில் உள்ள ஈத்கா மைதாத்தில் , நடைபெற்ற சிறப்புத் தொழுகையி... மேலும் பார்க்க

தளி அருகே தம்பி வெட்டிக் கொலை: அண்ணன் தலைமறைவு

ஒசூா்: தளி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சோ்ந்த சிக்க அழகப்பா மகன் நக்கலய்யா(... மேலும் பார்க்க

வெந்நீா் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த குழந்தை உயிரிழப்பு

ஒசூா்: ஒசூரில் வெந்நீா் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த மூன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சோ்ந்தவா் பூபாலன் (29). இவா் குடும்பத்துடன் ஒசூா் குமுதேப்பள்ளி அரு... மேலும் பார்க்க

படப்பள்ளி திம்மராய சுவாமி கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

ஊத்தங்கரை: படப்பள்ளி திம்மராயசுவாமி கோயில் தோ்த் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. ஊத்தங்கரை படப்பள்ளியில் பழைமை வாய்ந்த ஸ்ரீ திம்மராய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் 72 -ஆம் ஆண்... மேலும் பார்க்க