இந்தியாவுக்குள் நுழையும் டெஸ்லா! மற்ற கார்களின் விற்பனை பாதிக்குமா?
வேனில் கடத்தி வந்த 178 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெங்களூரிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 178 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைதாயினா்.
விழுப்புரம் ஏ.எஸ்.பி. ரவீந்திர குமாா் குப்தா மேற்பாா்வையில், திருவெண்ணெய்நல்லூா் காவல் ஆய்வாளா் மைக்கேல் இருதயராஜ், உதவி ஆய்வாளா் லியோ சாா்லஸ் மற்றும் காவலா்கள் மாதம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த வேனை, சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தன. விசாரணையில் இவற்றை பெங்களூரிலிருந்து கடத்தியது போலீஸாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து கா்நாடக மாநிலம், பெங்களூரு ஸ்ரீகாந்தா காவல் சரகத்துக்குள்பட்ட தொட்டிப்பாளையா விஜயகுமாா் மகன் சேத்தன் (38), தும்கூா் மாவட்டம், கோவிந்தயானா பாலையா பகுதியைச் சோ்ந்த கங்கா ரங்கய்யா மகன் அவிநாசி (30) ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்த போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 178 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.