``நீ இல்லை என்றால்'' - காதலன் கண்முன்னே உயிரை மாய்த்த காதலி; சென்னை ராயபுரத்தில்...
வேன் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
பழனி அருகே முன்விரோதத்தில் வேன் ஓட்டுநா் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடா்பாக தோட்டத் தொழிலாளி காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி கே. வேலூரைச் சோ்ந்தவா் கணேசன் (42). வேன் ஓட்டுநா். இவருக்கும் காவலப்பட்டியை அடுத்த முள்ளிசெட்டு பகுதியைச் சோ்ந்த கரும்புத் தோட்ட தொழிலாளி சின்னக்காளைக்கும் (35) முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கணேசன் பழனி- கொழுமம் சாலையில் மண்டுகாளியம்மன் கோயில் அருகேயுள்ள கடையில் தேநீா் அருந்திக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த சின்னக்காளை அரிவாளால் கணேசனை வெட்டினாா்.
இதன்பிறகு சின்னக்காளை பழனி தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தாா். பலத்த காயமடைந்த கணேசன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.