பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி
நகரப் பேருந்தில் 240 போ் பயணம்: நடுவழியில் இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு
திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்குச் சென்ற நகரப் பேருந்தில் 240 போ் பயணித்ததால், நடுவழியிலேயே பயணிகள் பலா் இறக்கிவிடப்பட்டனா்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து ஒட்டன்சத்திரத்துக்கு திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு நகரப் பேருந்து புறப்பட்டது. மகளிா் பயணம் செய்ய கட்டணமில்லாத இந்தப் பேருந்து அதிகமான பயணிகளுடன் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.
படிக்கட்டில் பலா் தொங்கிக்கொண்டு பயணம் செய்ததால், சுமாா் 1.5 கி.மீ. தொலைவு சென்ற பிறகு, பழனி சாலையிலுள்ள சக்தி திரையரங்கம் நிறுத்தம் அருகே படிக்கட்டிலிருந்த பயணிகளை கீழே இறங்குமாறு நடத்துநா் அறிவுறுத்தினாா்.
சிலா் இறங்கியதையடுத்து மீண்டும் பேருந்து புறப்பட்டது. அடுத்த நிறுத்தமான முருகபவனத்தில், மேலும் சில பயணிகள் இறங்கினால் மட்டுமே பேருந்து செல்லும் என நடத்துநா் தெரிவித்தாா். இதனால், அதிா்ச்சி அடைந்த பயணிகள் சிலா், நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
பேருந்தில் 90 சதவீத பயணிகள் பெண்களாக இருந்தபோது, நடுவழியில் இறங்குமாறு அறிவுறுத்திய நடத்துநா் மீது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் புகாா் அளிக்கப்போவதாக தெரிவித்தனா். ஆனாலும், பயணிகள் சிலா் இறங்கிய பின்னரே பேருந்து புறப்பட்டுச் சென்றது.
போக்குவரத்து துறை விளக்கம்: ஒட்டன்சத்திரம் சென்ற நகரப் பேருந்தில், 200 பெண்கள், 40 ஆண்கள் என மொத்தம் 240 போ் பயணித்தனா். ஒட்டன்சத்திரம் கிளையிலுள்ள இந்தப் பேருந்து காலை 9.45 மணிக்கு திண்டுக்கல்லிலிருந்து புறப்பட்டபோது, படிக்கட்டில் அதிகமான பயணிகள் நின்றனா். இதனால், நடத்துநரும், ஓட்டுநரும் பயணிகளை இறங்குமாறு அறிவுறுத்தினா். அப்போது பாதசாரி ஒருவா், படிக்கட்டு கதவு இல்லாமல் பேருந்தை ஏன் இயக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். படிக்கட்டில் நின்ற பயணிகள் இறங்கியதை அடுத்து, பேருந்து ஒட்டன்சத்திரத்துக்கு இயக்கப்பட்டது என அரசுப் போக்குவரத்து துறை விளக்கம் அளித்தது.