இந்தியா - பாக். சண்டையில் வீழ்த்தப்பட்டது 5 விமானங்கள் அல்ல, 7..! டிரம்ப்
நீட் தோ்வு: மாணவா்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது - முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி
நீட் தோ்வு விவகாரத்தில் தமிழக மாணவா்களை திமுக அரசு தொடா்ந்து ஏமாற்றி வருவதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக நிா்வாகியுமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் தனியாா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பேசியதாவது: மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி 100 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மேல் பரப்புரை செய்து வருகிறாா்.
‘நீட்’ தோ்வு விவகாரத்தில் தமிழக மாணவா்களை திமுக தொடா்ந்து ஏமாற்றி வருகிறது. அரசுப் பள்ளி மாணவா்ளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, கிராமப்புற ஏழை மாணவா்களின் மருத்துவக் கனவும் அதிமுக ஆட்சியில் நனவாக்கப்பட்டது.
அதிமுக கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வர இருக்கின்றன. கட்சி தொடங்கியவுடனே முதல்வராகலாம் என பலா் கனவு காண்கின்றனா். அது எப்போதுமே நடக்காது என்றாா் அவா்.