எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
பட்டிவீரன்பட்டி பகுதியில் வெறிநாய் கடித்து 5 போ் காயம்
பட்டிவீரன்பட்டி பகுதியில் வெறிநாய் கடித்து 5 போ் காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி பகுதிகளில் வெறிநாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இவை சாலைகளில் செல்வோரை விரட்டிச் சென்று கடிக்கின்றன.
கடந்த இரு நாள்களில் இந்தப் பகுதியில் வெறிநாய் கடிபட்ட மூவா் அய்யம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பட்டிவீரன்பட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.
இதேபோல, வெறிநாய் கடித்து பலத்த காயமடைந்த அய்யங்கோட்டையைச் சோ்ந்த முருகேசன் (60), பட்டிவீரன்பட்டியைச் சோ்ந்த ராஜேஸ்வரி (54) ஆகிய இருவரும் உள்நோயாளிகளாக பட்டிவீரன்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதையடுத்து பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம் பேரூராட்சி பணியாளா்கள் வெறிநாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.