காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறத்தான் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது
வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் அருகே வேன் கவிழ்ந்து ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் கல்லாங்காட்டுவலசைச் சோ்ந்தவா் வீரக்குமாா் (49). இவா் ஆம்னி வேனில் வள்ளியிரச்சல் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்குள்ள பொன்னழகு நாச்சியம்மன் கோயில் அருகே சாலை வளைவில் வேன் திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.