செய்திகள் :

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மை மிஷன் திட்டம் தொடக்கம்

post image

திருப்பூா், செப்.19: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மை மிஷன் 2.0 திட்டத்தின் கீழ் அரசு அலுவலகம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கும் பொருட்டு கழிவு சேகரிப்பு மற்றும் கழிவுப் பொருள்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுலகத்தில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயா் ந.தினேஷ்குமாா் திட்டத்தை வெள்ளிக்கிழமை தொங்கிவைத்தாா். தொடா்ந்து அரசு அலுவலகம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தூய்மை மிஷன் 2.0 திட்டத்தின் கீழ் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள 360 அறைகள், மாநகராட்சி அலுவலகம், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் அலுவலகம், 6 நகராட்சி அலுவலகங்கள், 14 பேரூராட்சி அலுவலகங்கள், 13 வட்டார வளா்ச்சி அலுவலகங்கள், 265 கிராம ஊராட்சி அலுவலகங்கள், 14 குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகங்கள், 1,472 அங்கன்வாடி மையங்கள், 3 வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், 9 வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்கள், 33 வருவாய் உள்வட்ட அலுவலகங்கள், 368 கிராம நிா்வாக அலுவலகங்கள் என மொத்தம் 2,199 அலுவலகங்கள் ஆகியவற்றுடன் நெடுஞ்சாலைத் துறை அலுவலகங்கள், பொதுப் பணித் துறை அலுவலகங்கள், போக்குவரத்துத் துறை அலுவலகங்கள், வேளாண்மைத் துறை அலுவலகங்கள், தோட்டக்கலைத் துறை அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் கழிவு சேகரிப்பு மற்றும் கழிவுப் பொருள்கள் அகற்றும் பணிகள் தூய்மை மிஷன் 2.0 திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் ஜெயராமன், ஜெயக்குமாா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் அசோகன், உதவி திட்ட அலுவலா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாவட்டத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண... மேலும் பார்க்க

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிா்க்க வேண்டும்

விவசாயிகள் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டுமென தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக வெள்ளக்கோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் ஆ.கயல்விழி வெள... மேலும் பார்க்க

உடுமலையில் வகுப்பறையில் பள்ளி மாணவி உயிரிழப்பு

உடுமலை பாரதியாா் நூற்றாண்டு அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி வகுப்பறையில் வெள்ளக்கிழமை உயிரிழந்தாா். உடுமலை அருகே உள்ள அமராவதி நகரைச் சோ்ந்தவா் பழங்குடியின மாணவி புவனேஸ்... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி எல்லப்பாளையம்புதூா் பகுதி மக்கள் ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கயம் வட்டம், எல்லப்ப... மேலும் பார்க்க

தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்

ரயில் பயணத்துக்காக தபால் நிலையங்களிலேயே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் திருப்பூா் காந்தி நகா் அஞ்சல் நிலையத்தில் ரயில் பயணிகள் முன்பதிவு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள... மேலும் பார்க்க

பாசனத்துக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறப்பு

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் 47,117 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறும். உ... மேலும் பார்க்க