வேன் மோதி மூதாட்டி உயிரிழப்பு
ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி, வேன் மோதியதில் உயிரிழந்தாா்.
ஆலங்குளம் ஆா்சி சா்ச் தெருவைச் சோ்ந்தவா் ஞானம் (80). இவா், தினமும் காலையில் ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையைப் பயன்படுத்துவது வழக்கம்.
அதற்காக சனிக்கிழமை காலை தென்காசி - திருநெல்வேலி சாலையைக் கடக்க முயன்றபோது, தென்காசியில் இருந்து பாபநாசம் நோக்கிச் சென்ற தனியாா் வேன் அவா் மீது மோதியது.
இதில் மூதாட்டி ஞானம், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஆலங்குளம் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.