செய்திகள் :

வேறு மாநிலங்களில் தேர்வு மையம்: ரயில்வே வாரியத்தின் பதில் ஏற்புடையதல்ல! - சு. வெங்கடேசன்

post image

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு ரயில்வே வாரியம் அளித்த பதில் ஏற்புடையதல்ல என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"ரயில்வே தேர்வுக்கு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 1,500 கிமீ அப்பால் தேர்வு மையம்.

இந்தியாவிலேயே அதிகமான உயர் கல்வி நிறுவனங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் 6,000 பேருக்கு மையம் கண்டுபிடிக்க முடியவில்லை என ரயில்வே வாரியம் சொல்லியுள்ள பதில் ஏற்புடையதல்ல.

தேர்வுக்கு மையங்களை கண்டறிய வழியற்ற மத்திய அரசு மும்மொழித் திட்டத்துக்கு மூச்சுமுட்டக் கத்துகிறது.

இதையும் படிக்க | அண்டை மாநிலத்தில் தேர்வு மையம் - ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம்

ரயில்வே தேர்வு வாரியத்தின் தலைவர் பிரதிபா யாதவ், நான் ரயில்வே சிபிடி 2(CBT 2) தேர்வு மையங்கள் வெளிமாநிலத்தில் போடப்பட்டு இருப்பது பற்றிய எனது கடிதத்திற்கு பதில் அளித்துள்ளார்.

ஒரே அமர்வில் எல்லா தேர்வர்களுக்கும் தேர்வு நடத்தப்பட வேண்டியுள்ளதாலும், அதே தேதியில் ரயில்வே தேர்வு வாரியத்தின் வேறு ஒரு தேர்வை நடத்தி வேண்டி இருப்பதாலும் சிபிடி 2 தேர்வர்கள் அனைவரையும் தமிழ்நாட்டு மையங்களில் மட்டும் பொருத்த முடியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் 6,000 பேருக்கு மையம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதோ, ஒரு தேதி சரிப்பட்டு வராவிட்டால் இன்னொரு தேதியை தேட முடியாது என்பதோ சமாதானம் செய்யும் பதில்களா?

இப்படி தமிழ்நாடு தேர்வர்கள் வெளிமாநிலங்களுக்கு பந்தாடப்படுவதை மத்திய அரசின் தேர்வு முகமைகள் தொடர்ந்து செய்து வருவதை நானே எத்தனையோ முறை எழுப்பியுள்ளேன்!

உண்மையான அக்கறை இருந்தால் எளிதில் தீர்வுகாணப்பட வேண்டிய ஒரு செயலை அக்கறை இன்றி அணுகி ஆயிரக்கணக்கான மாணவர்களை வெளி மாநிலங்களுக்கு அலைக்கழிப்பது ஏற்புடையதல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | வெந்நீர் குடித்தால் தொப்பை குறையுமா?

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை 5 இடங்களில் வெயில் சதமடித்தது. எனினும் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வரும் நாள்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என்றும் சென்னை வானிலை... மேலும் பார்க்க

இனி காவல் துறை அனுமதியின்றி போராட்டம்: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: இனி காவல் துறையிடம் அனுமதி கோராமல் பாஜக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா். டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னை அருகே திங்கள்கிழமை போராட்டத... மேலும் பார்க்க

தமிழை பயிற்று மொழியாக்கச் சட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழைப் பயிற்று மொழியாக்க நடப்பு சட்டப்பேரவைத் கூட்டத்தொடரிலேயே சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மொழிக் ... மேலும் பார்க்க

திமுக-பாஜக நாடகம்: தவெக விமா்சனம்

சென்னை: டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திமுக-பாஜக இணைந்து நாடகம் நடத்தி வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் விமா்சனம் செய்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அற... மேலும் பார்க்க

ரயில்வே போர்வை உறையில் தமிழ்!

ரயில்வே பயணிகள் போர்வை உறைகளில் தமிழ் உள்பட 3 மொழிகளில் அச்சிட தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு முன்பு ஹிந்தி, ஆங்கிலம் என இரு மொழிகள் மட்டுமே அச்சிடப்பட்டுவந்த நிலையில், ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மார்ச் 17 முத... மேலும் பார்க்க