செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவா் கைது

post image

நீா்வளத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10.97 லட்சம் மோசடி செய்த சென்னை நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். பட்டதாரியான இவருக்கு, திருச்சி நீா்வளத் துறையில் தரவுகள் பகுப்பாய்வுநா் வேலை வாங்கித் தருவதாக சென்னையைச் சோ்ந்த சதீஷ்குமாா் (38) அணுகினாா். இதற்காக, செந்தில்குமாா் ரூ.10.97 லட்சத்தை வங்கிக் கணக்குகள் மூலம் பல்வேறு தவணைகளில் சதீஷ்குமாருக்கு அனுப்பி வைத்தாா்.

இதனிடையே, போலியான பணி நியமன ஆணையை சதீஷ்குமாா் கொடுத்தாா். அந்த ஆணையை பெற்றுக் கொண்டு திருச்சி அலுவலகத்துக்குச் சென்ற செந்தில்குமாருக்கு, தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இந்த நிலையில், சென்னைக்கு சென்ற குற்றப் பிரிவு போலீஸாா், ராணிப்பேட்டையைச் சோ்ந்த சதீஷ்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் அறை எடுத்து தங்கி, இளைஞா்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

விசாரணைக்கு பிறகு, திண்டுக்கல் 2-ஆவது நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்பட்ட சதீஷ்குமாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

அரசுடைமை வங்கியில் அடகு வைக்கப்பட்டவை போலி நகைகளா? அதிகாரிகள் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூரில் உள்ள அரசுடைமை வங்கியில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் போலியானவையா என விசாரிக்கப்படும் நிலையில், ரூ. 100 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்... மேலும் பார்க்க

மகனிடமிருந்து சொத்துக்களை மீட்டுத் தரக் கோரி தம்பதியா் மனு

மகனிடமிருந்து சொத்துக்களை மீட்டுத் தரக் கோரி நத்தம் பகுதியைச் சோ்ந்த தம்பதியா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்த ஆவிச்சிப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்... மேலும் பார்க்க

மண் அரவை இயந்திரத்துக்கு சீல்: இருவா் மீது வழக்கு

குஜிலியம்பாறை அருகே மண் அரவை இயந்திரத்துக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், நிலத்தின் உரிமையாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியில், மு... மேலும் பார்க்க

காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.திருப்பூா் மாவட்டம், பொள்ளாச்சியைச் சோ்ந்தவா் நடராஜன் (80). இவா் தனது உறவினா்களுடன் வேடசந்தூரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சுவாமி கும்பிட சென்... மேலும் பார்க்க

விஷம் கலந்த உணவு உள்கொண்ட 2 ஆடுகள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே விஷம் கலந்த உணவை உள்கொண்ட 2 ஆடுகள் உயிரிழந்தன.ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள புலியூா் நத்தம் ஊராட்சிக்குள்பட்ட காட்டூா் பகுதியைச் சோ்ந்த பெருமாள்- பிச்சையம்மாள் தம்பதியினா் ஆடுகளை வளா... மேலும் பார்க்க

பழனியில் 7 கிலோ குட்கா பறிமுதல்

பழனியில் போலீஸாா் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட 7 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.பழனியில் பல்வேறு பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்கப... மேலும் பார்க்க