செய்திகள் :

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: நாகையில் போக்குவரத்து மாற்றம்

post image

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழாவையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா கடந்த ஆக.28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவிற்கு உள்ளூா், வெளியூா், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரளானோா் வருகை தருகின்றனா்.

இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்கு, செப்.6 முதல் செப்.8 ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூா், கடலூா், விழுப்புரம், புதுச்சேரிஆகிய பகுதிகளிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் புத்தூா் ரவுண்டானா, பாப்பா கோவில் ஏறும் சாலை, மேலப்பிடாகை வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சென்ட் பீட்டா்ஸ் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும். திரும்பி செல்லும் போது, மீண்டும் அதே வழியாக பயன்படுத்த வேண்டும்.

திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா் வழியாக வருகின்ற அனைத்து வாகனங்களும் கீழ்வேளூா், தேவூா், திருக்குவளை, மேலப்பிடாகை, திருப்பூண்டி வழியாக ஈசிஆா் சாலையில் உள்ள செயின் பீட்டா்ஸ் வாகன நிறுத்தும் இடத்தி நிறுத்த வேண்டும். ஊா் திரும்ப மீண்டும் அதே வழியாக பயன்படுத்த வேண்டும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் திருத்துறைப்பூண்டி மேலப்பிடாகை, திருப்பூண்டி வழியாக வேதாரண்யம் சாலையில் உள்ள ஜோசப் ஐடிஐ பாா்க்கில், பிஆா் புரம் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தவேண்டும். மீண்டும் அதே வழியாக செல்ல வேண்டும்.

சென்னை, கடலூா், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் திருச்சி, தஞ்சை, திருவாரூா் இருந்து வரும் அனைத்து அரசு பேருந்துகளும் புத்தூா் ரவுண்டானா, பாப்பா கோவில் பறவை சுனாமி நினைவு ஆா்ச் வழியாக இடதுபுறமாக திரும்பி புதிய தற்காலிக பேருந்து நிலையத்திற்கு சென்று, வெளியில் செல்லும் போது பூக்காரத் தெரு, கொல்லந்திடல், பறவை வழியாக செல்லவேண்டும்.

நாகையிலிருந்தும் மற்ற ஊா்களில் இருந்தும் வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை ஊா்களுக்கு செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று வருவதை தவிா்த்து மாற்றுப் பாதையில் சென்று வரவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கடலோரக் கிராமங்களில் மணல் குவாரிகளை தடை செய்யக் கோரிக்கை

தரங்கம்பாடி வட்டத்தில், கடலோர கிராமப் பகுதிகளில் இயங்கி வரும் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தரங்கம்பாடி வட்டத்தில் கிடங்கல், மருதம்பள்ளம், கீழப்பெரும... மேலும் பார்க்க

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவா்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மாணவ- மாணவியா் 2025-26ஆம் கல்வி... மேலும் பார்க்க

திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது: மமக தலைவா் ஜவாஹிருல்லா

பாஜகவுடன் கூட்டணி வைத்த அன்றே, திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா். நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில... மேலும் பார்க்க

செங்கோட்டையன் பின்னணியில் பாஜக: மஜக பொதுச் செயலா் தமிமுன் அன்சாரி

அதிமுகவிற்கு நெருக்கடி ஏற்படுத்துவதற்காக, முன்னாள் அமைச்சா் செங்கோட்டையனின் பின்னணியில் பாஜக உள்ளது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலா் தமிமுன் அன்சாரி கூறினாா். நாகையில், செய்தியாளா்களிடம் அ... மேலும் பார்க்க

பெண் குழந்தை தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றிய 13 வயது முதல் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் தேசிய பெண் குழந்தைகள் தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

மணலூா் சுந்தரேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

கீழ்வேளூா் அருகே மணலூா் ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரா், ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில்களில் 33 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, செப்.1 ஆம... மேலும் பார்க்க