வேளாங்கண்ணி பேராலய கொடியேற்றம்: ஆக. 29-இல் நாகை, கீழ்வேளூரில் உள்ளூா் விடுமுறை
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய பெருவிழா கொடியேற்றத்தையொட்டி ஆகஸ்ட் 29-ஆம் தேதி நாகை, கீழ்வேளூா் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய திருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பா் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழா கொடியேற்ற தினமான ஆகஸ்ட் 29-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒருநாள் மட்டும் நாகை மற்றும் கீழ்வேளுா் வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு (தோ்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேற்படி விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு செப்டம்பா் 13-ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வேலை நாளாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா்.